Wednesday, August 31, 2011




































தடம் மாறிய ரயிலாய்
நீ உதிர்த்து வந்த வாசகங்கள்
என் முன் நீள்கின்றன
இடம் மாறி பூத்த பூவாய்
கசங்கி உதிர்கிறது என் நேசம்

மாற்றத்தின் மகத்துவம் பற்றிய
முதல் சொற்பொழிவை
நீ நிகழ்த்த தொடங்கும் போது
ஏமாற்றத்தின் வலி அதிரும் கானங்களை
என் மனம் மீட்டிக்கொண்டிருக்கிறது


அதிர்ச்சியின் பள்ளத்தாக்கினின்று
நேசத்தின் வேர்களைப் பற்றியபடி
பகடியெனும் முகமூடியணிந்து
மெல்ல எழுகிறேன்

ஆற்றல் குவிந்த வார்த்தைகளை
உன் துணையாய் அனுப்பி வாழ்த்துகிறேன்
போய் வா தேவதையே

எதுவும் யாருக்கும்
எப்போதுமே இருக்க முடியாதுதான்
சொந்தமாய்...

அடுத்தவர் பசுவுக்கேயெனினும்
கொஞ்சம்
கைதூக்கி விடலாம்
புல்கட்டை.



































தடம் மாறிய ரயிலாய்
நீ உதிர்த்து வந்த வாசகங்கள்
என் முன் நீள்கின்றன
இடம் மாறி பூத்த பூவாய்
கசங்கி உதிர்கிறது என் நேசம்

மாற்றத்தின் மகத்துவம் பற்றிய
முதல் சொற்பொழிவை
நீ நிகழ்த்த தொடங்கும் போது
ஏமாற்றத்தின் வலி அதிரும் கானங்களை
என் மனம் மீட்டிக்கொண்டிருக்கிறது


அதிர்ச்சியின் பள்ளத்தாக்கினின்று
நேசத்தின் வேர்களைப் பற்றியபடி
பகடியெனும் முகமூடியணிந்து
மெல்ல எழுகிறேன்

ஆற்றல் குவிந்த வார்த்தைகளை
உன் துணையாய் அனுப்பி வாழ்த்துகிறேன்
போய் வா தேவதையே

எதுவும் யாருக்கும்
எப்போதுமே இருக்க முடியாதுதான்
சொந்தமாய்...

அடுத்தவர் பசுவுக்கேயெனினும்
கொஞ்சம்
கைதூக்கி விடலாம்
புல்கட்டை.

பாலில் நனைந்தச் சுடர்

















நிகழ்ந்து முடிந்த அந்த
கள்ளிப்பாலின் தொண்டைப் பயணம்
நேயங்கள் கொண்டு நிற்கும்
எல்லாக் கரைகளையும் உடைத்து சென்றது


அப்பாவின் முறைப்பும்
பாட்டியின் முணுமுணுப்பும்
அம்மாவின் ஈரத்தை துடைத்துவிட
அதன் 
உயிருள்ள கடைசிப் பார்வை
ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்த என்மீதுதானா?


வதங்கிப் போன அப்பூவை
வெள்ளைத் துணியால் சுருட்டி
திண்ணையில் போட்டபடி
ஒப்பாரியை தொடங்கினாள் பாட்டி
சடங்குகளுக்கான மும்முரத்தில் அப்பா
பாலாடையைப் பார்த்துக் கொண்டு அம்மா
அறைக்குள் எதிரொலித்த
அதன் அழுகுரலை மீண்டெடுக்க
 யத்தனித்திருந்தேன் நான்.




















நிகழ்ந்து முடிந்த அந்த
கள்ளிப்பாலின் தொண்டைப் பயணம்
நேயங்கள் கொண்டு நிற்கும்
எல்லாக் கரைகளையும் உடைத்து சென்றது


அப்பாவின் முறைப்பும்
பாட்டியின் முணுமுணுப்பும்
அம்மாவின் ஈரத்தை துடைத்துவிட
அதன் 
உயிருள்ள கடைசிப் பார்வை
ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்த என்மீதுதானா?


வதங்கிப் போன அப்பூவை
வெள்ளைத் துணியால் சுருட்டி
திண்ணையில் போட்டபடி
ஒப்பாரியை தொடங்கினாள் பாட்டி
சடங்குகளுக்கான மும்முரத்தில் அப்பா
பாலாடையைப் பார்த்துக் கொண்டு அம்மா
அறைக்குள் எதிரொலித்த
அதன் அழுகுரலை மீண்டெடுக்க
 யத்தனித்திருந்தேன் நான்.




























பேச்சை விடவும்
பொருள் பொதிந்த
நிமிஷங்களை
சுமந்துக் கொண்டிருக்கிறது
நம் மௌனம்


பரவி மடங்கி
சுருங்கி விரிந்து
தவிக்கும் உன் பாத விரல்களுக்குத்தான்
ஊற்றிக்கொடுக்கிறேன்
என் பார்வைகளை


தாவணி முனை சுருட்டும்
உன் பாவனையில்தான்
புதைந்துக்கிடக்கிறது
எனக்கான எல்லாம்


காற்று மோதலில்
மிதக்கும் பஞ்சென
மனவெளியில்
வெடித்து சிதறுகின்றன
உளறல்கள்


முழுகத் தொடங்கும் முன்பாக
தக்கை தேடும் கடைசி முயற்சியும்
தோற்றுப் போகிறது
உன்முன்.



























பேச்சை விடவும்
பொருள் பொதிந்த
நிமிஷங்களை
சுமந்துக் கொண்டிருக்கிறது
நம் மௌனம்


பரவி மடங்கி
சுருங்கி விரிந்து
தவிக்கும் உன் பாத விரல்களுக்குத்தான்
ஊற்றிக்கொடுக்கிறேன்
என் பார்வைகளை


தாவணி முனை சுருட்டும்
உன் பாவனையில்தான்
புதைந்துக்கிடக்கிறது
எனக்கான எல்லாம்


காற்று மோதலில்
மிதக்கும் பஞ்சென
மனவெளியில்
வெடித்து சிதறுகின்றன
உளறல்கள்


முழுகத் தொடங்கும் முன்பாக
தக்கை தேடும் கடைசி முயற்சியும்
தோற்றுப் போகிறது
உன்முன்.



தமிழனே


ஆயிரம் அறைகூவல்களை
சந்தித்துவிட்டது
உன் அறியாமை


துளிர்க்கும் சிறகுகளை
வெட்டி விடுகிறது
உன் நீடிய சுயநலம்


நீ எழுதிய தீர்ப்பின்
திராவக நெடி
சூழ்கிறது
கருவறையிலும்


தந்திர நரிகள்
உன்னைச் சுற்றி
நீயோ
மலைச்சுற்றலில்.




வீரப்பரம்பரையென
சிரம் நிமிரும்
உன் முகத்தில்
இன்றைய அசிங்கங்கள்


கூச்செறியும்
உன் பிடறியில்
தொங்குகிறது
பூஜைமணி


வாள் பிடித்த
உனது கை
கணக்கு சொல்கிறது
பாதரேகைகளை


எவரெவரோ ஆரோகணிக்க
இன்று நீ
அவரோகணமாக


அரியின் கர்ஜனை
எதிரொலித்த
உன் சுவர்களில்
நரியின் ஊளை


விருந்தோம்பலுக்கு
பெயர் பெற்ற
உன் வாயிலில்தான்
எதிர்ப்படுகின்றன
ராஜபாளையத்தின் கோரப்பற்கள்


கண்ணகிக்கு சிலையெடுத்த
உன் தெருமுனை மறைவில்தான்
அதிபக்த சிரத்தையோடு நடந்தபடி உள்ளன
விபச்சாரிணி தேவிக்கு
ராக்கால பூஜைகள்


திரையோடு தோலும்
கிழிக்கப் பட்ட ரணக் கஸிவில்
நனைகிறது உன் பக்கங்கள்


உனக்காகவே ஏற்றப்பட்ட சுடர்கள்
அணைந்துவிட்டன காலக் காற்றில்
இன்னும் நீ இருளில்


கதிரவனை திரைமூடிவிட்டு
எரிகல்லின் வெளிச்சத்தில்
எழுதபடுகிறது
உன் இருண்ட சரித்திரம்




அர்த்தம் தெரியாமல் நீ பாடும்
தமிழ்த்தாய் வாழ்த்தை
மிஞ்சியொலிக்கின்றன
முள்ளிவாய்க்காலின் மரண ஓலங்கள்


நீ நீரூற்ற தவறிய
வேர்களின் பிம்பங்கள்
உன் தொண்டையில் நிகழ்த்தும்
துக்க முடிச்சுகளை உதாசீனப்படுத்தி விட்டுத்தான்
நீ விழுங்கும் உணவின் கவளங்கள் நகர்கின்றன


கதறி ஓலித்த அழுகுரல்களை ஏந்தியக் காற்று
வாசல் முன் வந்து நிற்கும் போது
ரிங்டோன்களை மாற்றுவது குறித்து
பேசிக் கொண்டிருக்கிறோம் நாம்


வெற்றியின் மமதையில்
இருளின் தேவதைகள் நிகழ்த்திய
கோர வெறியாட்டங்கள்
திரையிடப் படுகின்றன நம் முன்
ஐயோ ..சீக்கிரம் பார்த்து முடி
முடிந்து விடப் போகின்றன
முடியாமல் நீளும் தொலைக்காட்சி சீரியல்கள்.

ஆயிரம் அறைகூவல்களை
சந்தித்துவிட்டது
உன் அறியாமை


துளிர்க்கும் சிறகுகளை
வெட்டி விடுகிறது
உன் நீடிய சுயநலம்


நீ எழுதிய தீர்ப்பின்
திராவக நெடி
சூழ்கிறது
கருவறையிலும்


தந்திர நரிகள்
உன்னைச் சுற்றி
நீயோ
மலைச்சுற்றலில்.




வீரப்பரம்பரையென
சிரம் நிமிரும்
உன் முகத்தில்
இன்றைய அசிங்கங்கள்


கூச்செறியும்
உன் பிடறியில்
தொங்குகிறது
பூஜைமணி


வாள் பிடித்த
உனது கை
கணக்கு சொல்கிறது
பாதரேகைகளை


எவரெவரோ ஆரோகணிக்க
இன்று நீ
அவரோகணமாக


அரியின் கர்ஜனை
எதிரொலித்த
உன் சுவர்களில்
நரியின் ஊளை


விருந்தோம்பலுக்கு
பெயர் பெற்ற
உன் வாயிலில்தான்
எதிர்ப்படுகின்றன
ராஜபாளையத்தின் கோரப்பற்கள்


கண்ணகிக்கு சிலையெடுத்த
உன் தெருமுனை மறைவில்தான்
அதிபக்த சிரத்தையோடு நடந்தபடி உள்ளன
விபச்சாரிணி தேவிக்கு
ராக்கால பூஜைகள்


திரையோடு தோலும்
கிழிக்கப் பட்ட ரணக் கஸிவில்
நனைகிறது உன் பக்கங்கள்


உனக்காகவே ஏற்றப்பட்ட சுடர்கள்
அணைந்துவிட்டன காலக் காற்றில்
இன்னும் நீ இருளில்


கதிரவனை திரைமூடிவிட்டு
எரிகல்லின் வெளிச்சத்தில்
எழுதபடுகிறது
உன் இருண்ட சரித்திரம்




அர்த்தம் தெரியாமல் நீ பாடும்
தமிழ்த்தாய் வாழ்த்தை
மிஞ்சியொலிக்கின்றன
முள்ளிவாய்க்காலின் மரண ஓலங்கள்


நீ நீரூற்ற தவறிய
வேர்களின் பிம்பங்கள்
உன் தொண்டையில் நிகழ்த்தும்
துக்க முடிச்சுகளை உதாசீனப்படுத்தி விட்டுத்தான்
நீ விழுங்கும் உணவின் கவளங்கள் நகர்கின்றன


கதறி ஓலித்த அழுகுரல்களை ஏந்தியக் காற்று
வாசல் முன் வந்து நிற்கும் போது
ரிங்டோன்களை மாற்றுவது குறித்து
பேசிக் கொண்டிருக்கிறோம் நாம்


வெற்றியின் மமதையில்
இருளின் தேவதைகள் நிகழ்த்திய
கோர வெறியாட்டங்கள்
திரையிடப் படுகின்றன நம் முன்
ஐயோ ..சீக்கிரம் பார்த்து முடி
முடிந்து விடப் போகின்றன
முடியாமல் நீளும் தொலைக்காட்சி சீரியல்கள்.























தோட்டங்களை சிதிலபடுத்திவிட்டு
ஒரு பூவுக்கான யாசகம்
விளைகிறது உன் வார்த்தைகளில்


லாவகம் படர்ந்த 
உன் பாதையில்
திசை தேட முடியவில்லை
என்னால்


பூட்டிய அறையெனத் தெரிந்தும்
விழுகின்றன 
என் விண்ணப்பங்கள்


அஸ்தமனம் அழகென்று
அந்தியை காட்டிய உனக்கு
உதயத்தை காட்டவே
இரவில் நிற்கிறேன் நான்

























தோட்டங்களை சிதிலபடுத்திவிட்டு
ஒரு பூவுக்கான யாசகம்
விளைகிறது உன் வார்த்தைகளில்


லாவகம் படர்ந்த 
உன் பாதையில்
திசை தேட முடியவில்லை
என்னால்


பூட்டிய அறையெனத் தெரிந்தும்
விழுகின்றன 
என் விண்ணப்பங்கள்


அஸ்தமனம் அழகென்று
அந்தியை காட்டிய உனக்கு
உதயத்தை காட்டவே
இரவில் நிற்கிறேன் நான்













எல்லாவற்றையும்
மணக்கச் செய்கிறது
எப்போதும்
இந்த அறுவடைக்காலம்.











எல்லாவற்றையும்
மணக்கச் செய்கிறது
எப்போதும்
இந்த அறுவடைக்காலம்.

சிமிட்டல்கள்




என்னை
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் தான்
பிடிக்கவில்லை










                                                                                           





மல்லிகையின்
மலர்ச்சி கண்டு
மகிழ்ந்து முடிக்கும் முன்பே
உதிரத்தொடங்கி விட்டேன்

                                                         





















செவிப்பசியோடு அலைந்தேன்
கேட்டன
ஓலங்கள் மட்டும்








கல்லும் நாயும்
காணக்கிடைக்கிறது
காணாமல் போனது
கைகள்














தேடுவது
புத்தகத்திற்கான
பணத்தை மட்டுமல்ல
வாங்க தகுந்த புத்தகத்தையும்















நாளை அழியும்
வெறும் தசை இதுவென்ற ஞானம் உதித்தது
துகிலுரிந்தப் பிறகு













கனியும் வரை 
காத்திருந்தேன்
பறித்துவிட்டார்கள் யாரோ
















அமைதி தேடி அலைந்தேன்
கிடைக்கவேயில்லை
மயானத்தைத் தவிர.




என்னை
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் தான்
பிடிக்கவில்லை










                                                                                           





மல்லிகையின்
மலர்ச்சி கண்டு
மகிழ்ந்து முடிக்கும் முன்பே
உதிரத்தொடங்கி விட்டேன்

                                                         





















செவிப்பசியோடு அலைந்தேன்
கேட்டன
ஓலங்கள் மட்டும்








கல்லும் நாயும்
காணக்கிடைக்கிறது
காணாமல் போனது
கைகள்














தேடுவது
புத்தகத்திற்கான
பணத்தை மட்டுமல்ல
வாங்க தகுந்த புத்தகத்தையும்















நாளை அழியும்
வெறும் தசை இதுவென்ற ஞானம் உதித்தது
துகிலுரிந்தப் பிறகு













கனியும் வரை 
காத்திருந்தேன்
பறித்துவிட்டார்கள் யாரோ
















அமைதி தேடி அலைந்தேன்
கிடைக்கவேயில்லை
மயானத்தைத் தவிர.

சாம்பல் நாட்கள்


























மறு உயிர்ப்பில்
எனக்கு விருப்பமில்லை


சருகுகள் தங்கிவிட்டன
உதிர்ந்தவை யாவும்
மலர்கள்


ஏக்கத்தால் நிரப்பட்டு
இழப்புகளால் குதறப்படுகையில்
எழும்பின பிரமிடுகள்
என்மீது


மிஞ்சியிருப்பவை
சுவாலை புசித்த
சாம்பல் நாட்கள்


ஒரு நாளின்
சுவாசக் காற்றில் 
அதுவும் சிதறக்கூடும்.

























மறு உயிர்ப்பில்
எனக்கு விருப்பமில்லை


சருகுகள் தங்கிவிட்டன
உதிர்ந்தவை யாவும்
மலர்கள்


ஏக்கத்தால் நிரப்பட்டு
இழப்புகளால் குதறப்படுகையில்
எழும்பின பிரமிடுகள்
என்மீது


மிஞ்சியிருப்பவை
சுவாலை புசித்த
சாம்பல் நாட்கள்


ஒரு நாளின்
சுவாசக் காற்றில் 
அதுவும் சிதறக்கூடும்.

பிரசவம்






















மருத்துவ மனையின்
பிரசவ வார்டுகளில்
மரண அவஸ்தையோடு
கர்ப்பிணி பெண்கள்


பெண்ணாகக் பிறக்கக்கூடாதென
ஒரு பாமர பெண்ணின்
மாரியம்மன் பிரார்த்தனை


பெருமை பொங்க
ஒருத்தி பார்க்கிறாள்
மலடிப் பட்டம் கட்டிவிட்ட 
மாமியாரை நோக்கி


செவிலித் தாய்களின்
எரிச்சலோடு
எச்சில் தெறிக்க
வந்து விழும் வார்த்தைகள்


திடீரென
வலி தாக்கும் கணங்கள்
வதையின் விளிம்பு காட்ட
எல்லாம் முடிந்து
ஈன்ற அந்த குழந்தை
முந்தானையை சமீபித்திருக்கையில்
நரம்புகள் குவியும் பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுகிறது
பெண்மையின் மகரஜோதி


பிரசவத்துக்கு பின்னும்
சுமக்கின்றன
கங்காருகள்
குப்பை தொட்டிகளும்
இங்கு
குழந்தைக்கு தொட்டிலாய்


மருந்து வீச்சம் அடிக்கும் வராந்தாக்களில்
பிரசவத்தால் வரும் பிரச்சனையோடு
நடந்து செல்கின்றனர் ஆண்கள்
பிரசவமே பிரச்சனையாக அமர்ந்திருக்கின்றனர்
இன்றைய பெண்கள்





















மருத்துவ மனையின்
பிரசவ வார்டுகளில்
மரண அவஸ்தையோடு
கர்ப்பிணி பெண்கள்


பெண்ணாகக் பிறக்கக்கூடாதென
ஒரு பாமர பெண்ணின்
மாரியம்மன் பிரார்த்தனை


பெருமை பொங்க
ஒருத்தி பார்க்கிறாள்
மலடிப் பட்டம் கட்டிவிட்ட 
மாமியாரை நோக்கி


செவிலித் தாய்களின்
எரிச்சலோடு
எச்சில் தெறிக்க
வந்து விழும் வார்த்தைகள்


திடீரென
வலி தாக்கும் கணங்கள்
வதையின் விளிம்பு காட்ட
எல்லாம் முடிந்து
ஈன்ற அந்த குழந்தை
முந்தானையை சமீபித்திருக்கையில்
நரம்புகள் குவியும் பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுகிறது
பெண்மையின் மகரஜோதி


பிரசவத்துக்கு பின்னும்
சுமக்கின்றன
கங்காருகள்
குப்பை தொட்டிகளும்
இங்கு
குழந்தைக்கு தொட்டிலாய்


மருந்து வீச்சம் அடிக்கும் வராந்தாக்களில்
பிரசவத்தால் வரும் பிரச்சனையோடு
நடந்து செல்கின்றனர் ஆண்கள்
பிரசவமே பிரச்சனையாக அமர்ந்திருக்கின்றனர்
இன்றைய பெண்கள்

Saturday, August 27, 2011














நாட்களின் யாத்திரையில்
கொஞ்ச கொஞ்சமாய் இழந்து வருகிறோம்


பூக்களின் புன்னகையாகவும்
புயலின் உக்கிரமாகவும்
புரியவியலா ஒரு கவிதையென நீ


நிழலில் ஒதுங்கியே
பழக்கப்பட்டுப் போனதால்
உஷ்ணத்தை உணர தயக்கமா
இல்லாவிடில்
நிழல் நுகர்வு மயக்கமா


ஒவ்வொரு துளியையும்
பருகத்துடிக்கும் நாம்
இதழின் விலாசம் இன்னும் அறியாதவராய்...


ஒளிக்கீற்று உட்புகமுடியா ஊடகத்தை
சிருஷ்டித்துக் கொண்ட
நாமே நமக்கு பகையாய்...


எதையுமே சரியாய் இசைக்காவிடினும்
கையில் வீணையோடும்
மனதில் ஆர்வத்தோடும்


யாதார்த்த வெம்மை சுட்டு பொசுக்கையிலும்
இன்னும் விடைபெறா
கனவுச் சிறகுகள்
சிலிர்ப்பூட்டும் வருடலாய்...


துண்டு துண்டாய் சிதறினும்
எஞ்சிய ரசப் படிவத்தில்
அலை அலையாய் மின்னும்  ரூபங்கள்
நீயாகவும்...
நானாகவும்...















நாட்களின் யாத்திரையில்
கொஞ்ச கொஞ்சமாய் இழந்து வருகிறோம்


பூக்களின் புன்னகையாகவும்
புயலின் உக்கிரமாகவும்
புரியவியலா ஒரு கவிதையென நீ


நிழலில் ஒதுங்கியே
பழக்கப்பட்டுப் போனதால்
உஷ்ணத்தை உணர தயக்கமா
இல்லாவிடில்
நிழல் நுகர்வு மயக்கமா


ஒவ்வொரு துளியையும்
பருகத்துடிக்கும் நாம்
இதழின் விலாசம் இன்னும் அறியாதவராய்...


ஒளிக்கீற்று உட்புகமுடியா ஊடகத்தை
சிருஷ்டித்துக் கொண்ட
நாமே நமக்கு பகையாய்...


எதையுமே சரியாய் இசைக்காவிடினும்
கையில் வீணையோடும்
மனதில் ஆர்வத்தோடும்


யாதார்த்த வெம்மை சுட்டு பொசுக்கையிலும்
இன்னும் விடைபெறா
கனவுச் சிறகுகள்
சிலிர்ப்பூட்டும் வருடலாய்...


துண்டு துண்டாய் சிதறினும்
எஞ்சிய ரசப் படிவத்தில்
அலை அலையாய் மின்னும்  ரூபங்கள்
நீயாகவும்...
நானாகவும்...


Tuesday, August 23, 2011





















தீப்பற்றி எரிந்த தினங்கள்
நனைந்தன தேனில்
ஏமாற்றத்தை இடம் பெயர்த்தேன் உன்னிடம்
ஒன்றல்ல எனினும்
எதிர்பாராதவையே விளைந்தன 
உனக்கும் எனக்கும்
அளவுக்கு மிஞ்சிய நஞ்சு அமுதமாகிவிட்டது
ஆம்
நீ செதுக்கிய சிலுவைதான் சாத்தியப்படுத்தியது
எனக்கான உயிர்ப்பை.




















தீப்பற்றி எரிந்த தினங்கள்
நனைந்தன தேனில்
ஏமாற்றத்தை இடம் பெயர்த்தேன் உன்னிடம்
ஒன்றல்ல எனினும்
எதிர்பாராதவையே விளைந்தன 
உனக்கும் எனக்கும்
அளவுக்கு மிஞ்சிய நஞ்சு அமுதமாகிவிட்டது
ஆம்
நீ செதுக்கிய சிலுவைதான் சாத்தியப்படுத்தியது
எனக்கான உயிர்ப்பை.

Monday, August 22, 2011









பிரிக்கவே முடியாதுதான்
பிரிவை
அதனால்தான் ஒட்டாமலிருக்கிறேன்
யாருடனும்.



அன்பின்
எல்லையற்றப் பெருவெளியில்
ஒற்றை மரமாய் 
நான்
பட்சிகள் தங்கிச்சென்ற
 சுவடுகள்
அதன் கிளைகளில்


அன்பின்
எல்லையற்றப் பெருவெளியில்
ஒற்றை மரமாய் 
நான்
பட்சிகள் தங்கிச்சென்ற
 சுவடுகள்
அதன் கிளைகளில்

உன் ஸ்நேகம் வேண்டி
































அலையடித்தது
கால் நனைக்க வந்து
மூழ்கிப் போய் விட்டேன்

எல்லா காணிக்கைகளையும்
முன்வைத்தேன்
தந்தாய் மௌனத்தை

இன்னமும் என் செவிகளில்
உன் ரீங்காரம் மட்டுமே

கோபுரம் சரிந்து விட்டதால்
தரையில் அநாதையாய்
கலசம்
இடிபாடிகளில் சிக்கிக்கொண்டும்
நீள்கிறதென் கைகள்
உன் ஸ்நேகம் வேண்டி

காற்றுவயலில்
நடவு நடத்திய
உன் கொலுசின் பரல்கள்
எந்தச் சபையில்
சிதறிவிட்டன

பாயிரத்தோடு
நின்றுவிட்டதே
நம் காவியம்
பல்லவியோடு
முடிந்துவிட்டதாய் 
நம் பாடல்.































அலையடித்தது
கால் நனைக்க வந்து
மூழ்கிப் போய் விட்டேன்

எல்லா காணிக்கைகளையும்
முன்வைத்தேன்
தந்தாய் மௌனத்தை

இன்னமும் என் செவிகளில்
உன் ரீங்காரம் மட்டுமே

கோபுரம் சரிந்து விட்டதால்
தரையில் அநாதையாய்
கலசம்
இடிபாடிகளில் சிக்கிக்கொண்டும்
நீள்கிறதென் கைகள்
உன் ஸ்நேகம் வேண்டி

காற்றுவயலில்
நடவு நடத்திய
உன் கொலுசின் பரல்கள்
எந்தச் சபையில்
சிதறிவிட்டன

பாயிரத்தோடு
நின்றுவிட்டதே
நம் காவியம்
பல்லவியோடு
முடிந்துவிட்டதாய் 
நம் பாடல்.







உன் மேஜையில்
சிதறியிருக்கும்
என் வார்த்தைகளை
தூசியோடு சேர்த்து
நீ துடைத்தெறியலாம்





ஒருபோதும் முடியாது
இதயத்திலிருந்து.








உன் மேஜையில்
சிதறியிருக்கும்
என் வார்த்தைகளை
தூசியோடு சேர்த்து
நீ துடைத்தெறியலாம்





ஒருபோதும் முடியாது
இதயத்திலிருந்து.

சைவம்




மாம்ஸத்தின் ருசியை
மனிதர்களுக்கு உணர்த்திய தீ
இன்றும் எரிக்கிறது
பிராணிகளை
கூடவே பெண்களையும்

அதை புசிப்பது பாவமென்ற
வள்ளலாரையும்
ருசித்து விட்டது காலமண்

சதைமென்று ருசித்தல்
சரியாவென கேட்டுக்கொண்டிருக்கையில்
நிகழ்ந்த உன் மௌனம்
மென்றுக்கொண்டிருந்தது
என் வார்த்தைகளை

சைவமென்றும் அசைவமென்றும்
பிரிந்தன ஜாதிகள்
இன்று
எல்லா ஜாதிகளும்
பிரிக்கின்றன
சிக்கன் பொட்டலத்தை.



மாம்ஸத்தின் ருசியை
மனிதர்களுக்கு உணர்த்திய தீ
இன்றும் எரிக்கிறது
பிராணிகளை
கூடவே பெண்களையும்

அதை புசிப்பது பாவமென்ற
வள்ளலாரையும்
ருசித்து விட்டது காலமண்

சதைமென்று ருசித்தல்
சரியாவென கேட்டுக்கொண்டிருக்கையில்
நிகழ்ந்த உன் மௌனம்
மென்றுக்கொண்டிருந்தது
என் வார்த்தைகளை

சைவமென்றும் அசைவமென்றும்
பிரிந்தன ஜாதிகள்
இன்று
எல்லா ஜாதிகளும்
பிரிக்கின்றன
சிக்கன் பொட்டலத்தை.
























நிழல் போர்த்திய உருவமென 
எப்போதேனும்
வந்து போகும் ஒரு  கனவாய் நீ.
சிறகடிப்புகள் யாவும்
நின்று போயின
எப்போதேனும்
கேட்கக் கூடும் அதன்  தேய்வுறும் ஒலி  மட்டும்.
கடிகாரம்தான்
 எப்படி அறியும்
காத்திருத்தலை
ஒரே பக்கத்தோடு
முடிந்து விடுவதில்லைதான்
எந்த புத்தகமும்.

























அற்புதமான தருணங்களின்
வெம்மையில்
வார்த்தைகள் மறுக்கின்றன முளைக்க.
உடைகழற்றியெறிந்து
நெருங்கி வா இன்னும்
பெளர்ணமிக்கும் வெட்கம்
தேய்பிறையாகட்டும்
நீந்தி நீந்தி முழுகும்
பயங்களை
சாம்பலும் மிஞ்சாமல் கொளுத்து
எதற்கும் இருக்கிறேன்
நானென்கிற ஆறுதல்
நிரம்பட்டும் தற்காலிகமாக


திரைகிழித்து சற்றே
உன் அசல்முகம் காட்டு
பளிங்கின் சலனமற்ற பரப்பில்
மிதக்கட்டும் நம் சுயம் மட்டும்.
























அற்புதமான தருணங்களின்
வெம்மையில்
வார்த்தைகள் மறுக்கின்றன முளைக்க.
உடைகழற்றியெறிந்து
நெருங்கி வா இன்னும்
பெளர்ணமிக்கும் வெட்கம்
தேய்பிறையாகட்டும்
நீந்தி நீந்தி முழுகும்
பயங்களை
சாம்பலும் மிஞ்சாமல் கொளுத்து
எதற்கும் இருக்கிறேன்
நானென்கிற ஆறுதல்
நிரம்பட்டும் தற்காலிகமாக


திரைகிழித்து சற்றே
உன் அசல்முகம் காட்டு
பளிங்கின் சலனமற்ற பரப்பில்
மிதக்கட்டும் நம் சுயம் மட்டும்.

Friday, August 19, 2011






















சில்லிடும் காற்றின் ஊடுருவல்
குடிசை வெளியெங்கும்


நம் அழுகையின் வலி சுமந்து
நீள்கிறது
இந்த இரவு
தயவு செய்து நீ அழாதே
என் கருப்பை
உதிர்க்கத்தவறிய குருதியில்
உதித்து வந்த மகளே அழாதே


மார்பை கவ்வியிருக்கும்
பிஞ்சு உதடுகள்
அப்படியே இருக்கட்டும்
உறிஞ்சுதலின்
எல்லா வாசல்களும் திறக்கபடட்டும்


மகளே
விதியின் கூர்முனைகள்
நெருங்குகின்றன கழுத்தை
நாளை உன் சூரியன்
உதிக்கப்போவதில்லை


நம் சிறு நேர சந்திப்பின்
நிரந்திர அடையாளமென
ஒரு சன்ன புன்னகை கொண்டு
விடைகொடுக்க முயற்சி செய்
என் செல்ல மகளே
மறு ஜென்மத்திலேனும்
மாறியிருக்கட்டும்
விதியோ
அல்லதுன் குறியோ.





















சில்லிடும் காற்றின் ஊடுருவல்
குடிசை வெளியெங்கும்


நம் அழுகையின் வலி சுமந்து
நீள்கிறது
இந்த இரவு
தயவு செய்து நீ அழாதே
என் கருப்பை
உதிர்க்கத்தவறிய குருதியில்
உதித்து வந்த மகளே அழாதே


மார்பை கவ்வியிருக்கும்
பிஞ்சு உதடுகள்
அப்படியே இருக்கட்டும்
உறிஞ்சுதலின்
எல்லா வாசல்களும் திறக்கபடட்டும்


மகளே
விதியின் கூர்முனைகள்
நெருங்குகின்றன கழுத்தை
நாளை உன் சூரியன்
உதிக்கப்போவதில்லை


நம் சிறு நேர சந்திப்பின்
நிரந்திர அடையாளமென
ஒரு சன்ன புன்னகை கொண்டு
விடைகொடுக்க முயற்சி செய்
என் செல்ல மகளே
மறு ஜென்மத்திலேனும்
மாறியிருக்கட்டும்
விதியோ
அல்லதுன் குறியோ.

கடன்






















கடன் வாங்கினால்தான்
கழிக்க முடிகிறதாம்
காலத்தை

கடன் வாங்குவது தவறெனில்
முதல் குற்றம்
கணக்கு வாத்தியாருடையதே

சுயத்தில் நின்று
நொடிதோறும் அவதியுறும்
நட்சத்திரம் பார்க்கிலும்

கடன் வாங்கி
அலங்கரித்துக் கொள்ளும்
நிலவே பேசப்படுகிறது

ஆயின்
நட்சத்திரத்திற்கென
என்றுமில்லை
அமாவாசை.





















கடன் வாங்கினால்தான்
கழிக்க முடிகிறதாம்
காலத்தை

கடன் வாங்குவது தவறெனில்
முதல் குற்றம்
கணக்கு வாத்தியாருடையதே

சுயத்தில் நின்று
நொடிதோறும் அவதியுறும்
நட்சத்திரம் பார்க்கிலும்

கடன் வாங்கி
அலங்கரித்துக் கொள்ளும்
நிலவே பேசப்படுகிறது

ஆயின்
நட்சத்திரத்திற்கென
என்றுமில்லை
அமாவாசை.

Thursday, August 18, 2011

இளநீர்














 தாகம் தணிக்கும்
இளநீர் விற்பவன்
வெயிலோடு 


நகரவாசிகளுக்கு
பிடித்துபோனதாம் இளநீரை
பிடிக்காமல் போனது வாழ்க்கை
இளநீர் விற்பவனுக்கு


கள்ளும் கூட இளநீர்தானென்ற
நண்பனோடு சேர்ந்து
தள்ளாடியக் கணங்களும்
வீட்டில்
அல்லாடியக் கணங்களும்


முப்பொழுதும்
இளநீர் குடித்தக் காலத்தை
வெட்டிவிட்டன குலைப்பூச்சிகள்


பட்டுப் போனது மரம்
படாமல் போனது
கட்டிய மருந்து


அடிமரத்தில் முதுகு சாய்த்து
நான் கவிதை சொல்வேன்
அவைகள்
கேட்டுக்கொண்டிருக்கும்


பட்டுவிட்ட அவைகளும்
பட்டுக்கொண்டிருக்கும் நானுமாக
இன்றைக்கும் எங்கள் இருப்பு


ரசாயனத்தின் திராவக நெடியில்
கவிதைகள்தாம் போயின
கரைந்து. 


















 தாகம் தணிக்கும்
இளநீர் விற்பவன்
வெயிலோடு 


நகரவாசிகளுக்கு
பிடித்துபோனதாம் இளநீரை
பிடிக்காமல் போனது வாழ்க்கை
இளநீர் விற்பவனுக்கு


கள்ளும் கூட இளநீர்தானென்ற
நண்பனோடு சேர்ந்து
தள்ளாடியக் கணங்களும்
வீட்டில்
அல்லாடியக் கணங்களும்


முப்பொழுதும்
இளநீர் குடித்தக் காலத்தை
வெட்டிவிட்டன குலைப்பூச்சிகள்


பட்டுப் போனது மரம்
படாமல் போனது
கட்டிய மருந்து


அடிமரத்தில் முதுகு சாய்த்து
நான் கவிதை சொல்வேன்
அவைகள்
கேட்டுக்கொண்டிருக்கும்


பட்டுவிட்ட அவைகளும்
பட்டுக்கொண்டிருக்கும் நானுமாக
இன்றைக்கும் எங்கள் இருப்பு


ரசாயனத்தின் திராவக நெடியில்
கவிதைகள்தாம் போயின
கரைந்து. 





மழையுதிர் காலம்

 
வெட்கத்தின் குவிமுனை
உழுது உழுது
கிளரும் உனது வாசம்

ஒரு நீண்ட வாசகத்தின்
முதற் சொல்லில் நாம்
ஒவ்வொரு சொல்லுக்கிடையேயும்
புற்றுகள்

வழக்கம் போலவே
குடையின்றி வா
நமக்கான காத்திருப்பில்
அந்த மரத்தடிகள்

நழுவிய சேலையை
மீண்டும் திருப்பாதே
அதன் பணிக்கு
மழைச்சிரிப்பைக் காட்டிலும்
அது முக்கியமில்லை
என் கண்களுக்கு

இதுவே ஈடன் தோட்டம்
செவி நிறையும்
சர்ப்ப உபதேசம்
சாபம் வாங்கலாம் நாம்.

 
வெட்கத்தின் குவிமுனை
உழுது உழுது
கிளரும் உனது வாசம்

ஒரு நீண்ட வாசகத்தின்
முதற் சொல்லில் நாம்
ஒவ்வொரு சொல்லுக்கிடையேயும்
புற்றுகள்

வழக்கம் போலவே
குடையின்றி வா
நமக்கான காத்திருப்பில்
அந்த மரத்தடிகள்

நழுவிய சேலையை
மீண்டும் திருப்பாதே
அதன் பணிக்கு
மழைச்சிரிப்பைக் காட்டிலும்
அது முக்கியமில்லை
என் கண்களுக்கு

இதுவே ஈடன் தோட்டம்
செவி நிறையும்
சர்ப்ப உபதேசம்
சாபம் வாங்கலாம் நாம்.

நீ
துப்பியெறிந்த
நகத்துணுக்கோடு
வீதியில் கிடக்கிறது
என் அன்பு.

நீ
துப்பியெறிந்த
நகத்துணுக்கோடு
வீதியில் கிடக்கிறது
என் அன்பு.

கிளிஞ்சல்களின் பாடல்





சிள்வண்டுகளின் ரீங்கரிப்புடன்
நாணல் செடிகள் அசைய
தென்பெண்ணையின்
குளிர்ந்த மணலில் படுத்தபடி
நான் கேட்பேன்
கிளிஞ்சல்களின் பாடலை
நான் படிப்பேன்
நட்சத்திரங்களின் கவிதையை
நான் வரைவேன்
நதியலைகளின் மௌனத்தை




இரவுகளின் ரம்மியத்தில்
மணல் வாருவோர் இரைச்சல்கள்
நிறையத்தொடங்கியபின்
காணாமல் போயின
நட்சத்திரங்களின் கவிதையும்
நதியலைகளின் மௌனமும்


குவிக்கபடும் மணற்திட்டுக்கள்
ஒவ்வொன்றின் உள்ளிருந்தும்
காகத்தின் ஒப்பாரியென
கேட்டபடியிருக்கின்றன
கிளிஞ்சல்களின் பாடல் மட்டும்.




சிள்வண்டுகளின் ரீங்கரிப்புடன்
நாணல் செடிகள் அசைய
தென்பெண்ணையின்
குளிர்ந்த மணலில் படுத்தபடி
நான் கேட்பேன்
கிளிஞ்சல்களின் பாடலை
நான் படிப்பேன்
நட்சத்திரங்களின் கவிதையை
நான் வரைவேன்
நதியலைகளின் மௌனத்தை




இரவுகளின் ரம்மியத்தில்
மணல் வாருவோர் இரைச்சல்கள்
நிறையத்தொடங்கியபின்
காணாமல் போயின
நட்சத்திரங்களின் கவிதையும்
நதியலைகளின் மௌனமும்


குவிக்கபடும் மணற்திட்டுக்கள்
ஒவ்வொன்றின் உள்ளிருந்தும்
காகத்தின் ஒப்பாரியென
கேட்டபடியிருக்கின்றன
கிளிஞ்சல்களின் பாடல் மட்டும்.



வழிந்து
வழிந்து
புரளும் என் தாக நதிகள்
தயங்கி
தயங்கி
வருகின்றன உன்னை நோக்கி


அணைக்கட்டுகளோ
ஏராளம்



வழிந்து
வழிந்து
புரளும் என் தாக நதிகள்
தயங்கி
தயங்கி
வருகின்றன உன்னை நோக்கி


அணைக்கட்டுகளோ
ஏராளம்
ஓட்டத்தில் திரும்பி
நீ
உதிர்த்துப் போன
கடைசிக் கையசைப்போடு
நின்றுவிட்டதென்
கடிகாரம்.
ஓட்டத்தில் திரும்பி
நீ
உதிர்த்துப் போன
கடைசிக் கையசைப்போடு
நின்றுவிட்டதென்
கடிகாரம்.

குரல்



அழுகுரல் நெளிய
சூம்பிய முகத்துடன்
பள்ளிச் செல்லும் சிறார்களுக்கென
அங்கே என்ன கிடைத்துவிடப் போகிறது
அவர்கள் சிரிப்பிலும் பெரிதாக


குரல் மாறியபோது
எழுந்த முதல் கிண்டல்
அம்மாவுடையதா
அக்காவுடையதா


கண் முன் இறந்த
கன்றுக்குட்டி எழுப்பிய கடைசிக் குரல்
மக்கிய வடிவ கனாக்களில்


பிடித்தமான குரலை
பிடித்தமான நேரத்தில்
ஒருபோதும் அழைத்து வந்ததில்லை
விருப்பு வெறுப்பற்றிருந்தாலும்
இந்த தொலைபேசி


மாறியவை அர்த்தங்கள்தான்
இன்னும் மாறாமல்
அவள் பேச்சுக்குரல்


எந்தக் கனவிலேனும்
எப்போதாவது மீட்டெடுக்க முடியுமா
கருப்பை வெளித்தள்ளிய
முதல் கணத்தில் நிகழ்ந்தயென்
அழுகுரலை.





அழுகுரல் நெளிய
சூம்பிய முகத்துடன்
பள்ளிச் செல்லும் சிறார்களுக்கென
அங்கே என்ன கிடைத்துவிடப் போகிறது
அவர்கள் சிரிப்பிலும் பெரிதாக


குரல் மாறியபோது
எழுந்த முதல் கிண்டல்
அம்மாவுடையதா
அக்காவுடையதா


கண் முன் இறந்த
கன்றுக்குட்டி எழுப்பிய கடைசிக் குரல்
மக்கிய வடிவ கனாக்களில்


பிடித்தமான குரலை
பிடித்தமான நேரத்தில்
ஒருபோதும் அழைத்து வந்ததில்லை
விருப்பு வெறுப்பற்றிருந்தாலும்
இந்த தொலைபேசி


மாறியவை அர்த்தங்கள்தான்
இன்னும் மாறாமல்
அவள் பேச்சுக்குரல்


எந்தக் கனவிலேனும்
எப்போதாவது மீட்டெடுக்க முடியுமா
கருப்பை வெளித்தள்ளிய
முதல் கணத்தில் நிகழ்ந்தயென்
அழுகுரலை.



ஆலங்கட்டி




சிறு வயதில் ஆலங்கட்டிகளை
சேகரித்த பாட்டில்
இன்று எந்த பரண் மேலோ

மருந்துக்கு உதவுமென்று
யாரோ சொல்ல
நனைந்தபடி சேகரித்தோம்
நோய்பிடித்துக்கொண்டது
நமக்கு

கரைந்துவரும் கட்டிகளை
என் கன்னத்தில் அழுத்தி விளையாடுவாய்
வெதுவெதுப்பூட்டும் உன் ஸ்பரிசம்
சருமத்தில் வலை பின்னும்

ஏனோ இப்போது எந்த மழையும்
அழைத்து வருவதில்லை
ஆலங்கட்டிகளை

தனியாகவே விழுகின்றன
துளிகள் ஒவ்வொன்றும்
விழும் இந்த மழைத்துளிகளை
வெறித்தபடி நிற்கிறேன்
 தனியாக.










சிறு வயதில் ஆலங்கட்டிகளை
சேகரித்த பாட்டில்
இன்று எந்த பரண் மேலோ

மருந்துக்கு உதவுமென்று
யாரோ சொல்ல
நனைந்தபடி சேகரித்தோம்
நோய்பிடித்துக்கொண்டது
நமக்கு

கரைந்துவரும் கட்டிகளை
என் கன்னத்தில் அழுத்தி விளையாடுவாய்
வெதுவெதுப்பூட்டும் உன் ஸ்பரிசம்
சருமத்தில் வலை பின்னும்

ஏனோ இப்போது எந்த மழையும்
அழைத்து வருவதில்லை
ஆலங்கட்டிகளை

தனியாகவே விழுகின்றன
துளிகள் ஒவ்வொன்றும்
விழும் இந்த மழைத்துளிகளை
வெறித்தபடி நிற்கிறேன்
 தனியாக.







ஒற்றை மரம்




மீண்டும் மீண்டும்
சலிப்புமிழும் தினங்களே நடையுறுகின்றன

கணங்கள் ஒவ்வொன்றும்
மாற்றமுடையதெனும் குரல்
கைகொடுப்பதேயில்லை அநேகப் பொழுதுகளின் வீழ்ச்சிகளில்.

நிழுலும் இழந்த பொழுதுகளின் வலி பொறாமல்
 கதறிக்கிளம்பும் அழுகையின் அதிர்வுகள்
வாயு வெளிதனில் ரீங்கரித்தபடியே இருக்கின்றன...

தலையிழந்த முண்டமேனும்
ரூபமற்ற ஆவியெதுவும்
 உயிருறிஞ்சும் யட்சிணியேதும்
முட்கள் மண்டிய பெண்மடியாவது
கிடைக்ககூடுமா துணையென.



மீண்டும் மீண்டும்
சலிப்புமிழும் தினங்களே நடையுறுகின்றன

கணங்கள் ஒவ்வொன்றும்
மாற்றமுடையதெனும் குரல்
கைகொடுப்பதேயில்லை அநேகப் பொழுதுகளின் வீழ்ச்சிகளில்.

நிழுலும் இழந்த பொழுதுகளின் வலி பொறாமல்
 கதறிக்கிளம்பும் அழுகையின் அதிர்வுகள்
வாயு வெளிதனில் ரீங்கரித்தபடியே இருக்கின்றன...

தலையிழந்த முண்டமேனும்
ரூபமற்ற ஆவியெதுவும்
 உயிருறிஞ்சும் யட்சிணியேதும்
முட்கள் மண்டிய பெண்மடியாவது
கிடைக்ககூடுமா துணையென.

மழைக்குப் பிறகான மணம்.






























நான் நின்றுக்கொண்டிருக்கிறேன்
எனும் உறுத்தலோடு
நீ அமர்ந்திருக்கிறாய்...   


வாய்ப்பானதொரு சந்தர்ப்பத்தில்
மடிந்திருக்கும் உன் கால்கள்
நேர்பெற்றுவிடக் கூடும்


தயக்கத்துடனான உன் அமர்வில் தென்படும்
தவிப்பின் சலனங்கள்
சுவாரஸியமானவை


இயல்பின்மையில் துளிர்க்கும்
வார்த்தைகளிலும் சேர்ந்திருக்கிறது
இயல்பான மென்மையும் 
அதனியல்பான வசீகரமும்


ஜன்னலுக்கப்பால் கடந்துச் செல்லும்
பெயரறியா பறவையொன்றை
ரஸிப்பதான பாவனையில் நீ எழுந்து நிற்கையில்
பால் தீர்த்த கைக்குழந்தைக்காரி உணரும்
மழைக்குப் பிறகான மணம்.





























நான் நின்றுக்கொண்டிருக்கிறேன்
எனும் உறுத்தலோடு
நீ அமர்ந்திருக்கிறாய்...   


வாய்ப்பானதொரு சந்தர்ப்பத்தில்
மடிந்திருக்கும் உன் கால்கள்
நேர்பெற்றுவிடக் கூடும்


தயக்கத்துடனான உன் அமர்வில் தென்படும்
தவிப்பின் சலனங்கள்
சுவாரஸியமானவை


இயல்பின்மையில் துளிர்க்கும்
வார்த்தைகளிலும் சேர்ந்திருக்கிறது
இயல்பான மென்மையும் 
அதனியல்பான வசீகரமும்


ஜன்னலுக்கப்பால் கடந்துச் செல்லும்
பெயரறியா பறவையொன்றை
ரஸிப்பதான பாவனையில் நீ எழுந்து நிற்கையில்
பால் தீர்த்த கைக்குழந்தைக்காரி உணரும்
மழைக்குப் பிறகான மணம்.

நீயும் ...நானும்....



யாருக்காகவோ நீ 
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்

ன் கண்களையே பிடுங்க முயற்சி நடந்த போது 
இமையில் படிந்த
தூசுகளைக் கூட துடைத்து விட்டவள் நீ


என் வேருக்கடியில்
திராவகம் தெளிக்கும் வேலை நடந்த போது
விழுதுகளின் வலிமையை அதிகப்படுத்தியவள் நீ

பாதையெங்கும்
புதைகுழிகள் அணிவகுத்த போது
பாதங்கள் பதிய மடி தந்தவள் நீ

இழக்க விரும்பாத
என்னால் இழக்கவே முடியாத
ஒரே செல்வம் நீ
 
யாருக்காகவோ
நீ
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்


உன் வார்த்தைகள் மௌனĩ0;் சிறைகளில்
மறைக்கப்பட்டதால்
என் கனவுகள்
ஆயுள் சிறைகளில் அடைக்கபட்டன.


காற்சலங்கையை அவிழ்த்துவிட்டு
கைவிலங்கை அல்லவா
அணிந்துக் கொண்டாய்


துணிச்சலின் தொடர்பற்று போய்
உன்னை நீயே
வாட்டிக் கொண்டதால்

கனவுகளை எரித்துவிட்டு
கவிதையின் நெற்றியில் 
தீற்றிக்கொண்டிருக்கிறேன்


குரல்வளையே நெறிக்கப்பட்ட பிறகு
பந்தயத்தில் எப்படி நான் பாடமுடியும்?


கால்களே சிறைபட்ட பிறகு
வீதியின் விசாலத்தில் எப்படி நான் மகிழ்வது?

கைகளே செயலிழந்த பிறகு
பரிசளிக்கப்பட்ட தூரிகையில்
எதை நான் வரைவது?

எவருடைய இழப்பையோ
நான் கண்டெடுக்கையில்
எனக்கான பொற்குவியல் களவு போய்விட்டது.

ஈரத்தின் வாடையே
இல்லையென்றானதால்
என்
கண்களின் மதகுகள் திறந்துக் கொண்டன

யாருக்காகவோ நீ 
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்

என் அன்பே
நிரப்ப விரும்பாத
என்னால்
நிரப்பவே முடியாத ஒரே இழப்பு நீ.


யாருக்காகவோ நீ 
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்

ன் கண்களையே பிடுங்க முயற்சி நடந்த போது 
இமையில் படிந்த
தூசுகளைக் கூட துடைத்து விட்டவள் நீ


என் வேருக்கடியில்
திராவகம் தெளிக்கும் வேலை நடந்த போது
விழுதுகளின் வலிமையை அதிகப்படுத்தியவள் நீ

பாதையெங்கும்
புதைகுழிகள் அணிவகுத்த போது
பாதங்கள் பதிய மடி தந்தவள் நீ

இழக்க விரும்பாத
என்னால் இழக்கவே முடியாத
ஒரே செல்வம் நீ
 
யாருக்காகவோ
நீ
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்


உன் வார்த்தைகள் மௌனĩ0;் சிறைகளில்
மறைக்கப்பட்டதால்
என் கனவுகள்
ஆயுள் சிறைகளில் அடைக்கபட்டன.


காற்சலங்கையை அவிழ்த்துவிட்டு
கைவிலங்கை அல்லவா
அணிந்துக் கொண்டாய்


துணிச்சலின் தொடர்பற்று போய்
உன்னை நீயே
வாட்டிக் கொண்டதால்

கனவுகளை எரித்துவிட்டு
கவிதையின் நெற்றியில் 
தீற்றிக்கொண்டிருக்கிறேன்


குரல்வளையே நெறிக்கப்பட்ட பிறகு
பந்தயத்தில் எப்படி நான் பாடமுடியும்?


கால்களே சிறைபட்ட பிறகு
வீதியின் விசாலத்தில் எப்படி நான் மகிழ்வது?

கைகளே செயலிழந்த பிறகு
பரிசளிக்கப்பட்ட தூரிகையில்
எதை நான் வரைவது?

எவருடைய இழப்பையோ
நான் கண்டெடுக்கையில்
எனக்கான பொற்குவியல் களவு போய்விட்டது.

ஈரத்தின் வாடையே
இல்லையென்றானதால்
என்
கண்களின் மதகுகள் திறந்துக் கொண்டன

யாருக்காகவோ நீ 
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்

என் அன்பே
நிரப்ப விரும்பாத
என்னால்
நிரப்பவே முடியாத ஒரே இழப்பு நீ.