Wednesday, July 29, 2015



படிக்கப்படும் கீதையின் அருமை
பாடப்படும் தேவியின் கருணை
ஓதப்படும் குரானின் இனிமை
இசைக்கப்படும் தேவனின் மகிமை
ஒழுகப்படும் அருகனின் வாய்மை
உணரப்படும் புத்தனின் மேன்மை
மொத்தமாய் திரண்ட உருவே!

ஒரு தீவிலிருந்து
உதித்தவன் நீ என்பதாலா
உன்னை எத்திசையிலும்
புகழின் பெருங்கடல்கள் சூழ்ந்தேயிருந்தன...

கனவுகாணுங்கள் கனவுகாணுங்கள் என போதித்தே
எண்ணற்ற இளைஞர்களால்
கனவு காணப்படுபவனாக நீ பிரகாசித்தாய்!

மெழுகுவர்த்தியென 
நீ உருகிக் கொண்டே இருக்க
உன் புகழின் பேரொளியோ
பெருகிக் கொண்டே இருந்தது...

அக்கினிச் சிறகுகளுடன்
ராமேசுவரத்தில் தயாரான அஸ்திரமே!
நீ பாய்ந்த இடங்களில் எல்லாம்
பேரூற்றாய் பீறிட்டன
குழ்ந்தைகளின் அன்பு
மாணவர்களின் சிநேகம்
இளைஞர்களின் கனவு
நோயாளிகளுக்கான பரிவு
முதியோர்களுக்கான கருணை
வாழ்வு மீதான நம்பிக்கை...

இந்திய துணைக்கண்டத்தில்
இதுவரை  நிகழ்ந்ததிலேயே
மிகப்பெரிய நிலநடுக்கம்  உன் இறப்புதான்...

கடற்கரையை மட்டுமல்ல
கண்டம் முழுவதையும் தாக்குகின்றன
துக்க சுனாமியின் பேரலைகள்
நாடே தத்தளிக்கிறது நாயகனே!

ஏவப்படும் எல்லா கணைகளும்
இலக்கை அடைந்து விடுவதில்லைதான்
ஆனால்
இலக்கை மிஞ்சிய இலக்குகளையும்
இனிதே அடைந்த
இறைவனின் ஆகச்சிறந்த ஏவுகணை நீ!
இறந்தப் பின்னரும்
அதன் இலக்குகள்
எய்தப் பட்டுக்கொண்டே இருக்கும்!








படிக்கப்படும் கீதையின் அருமை
பாடப்படும் தேவியின் கருணை
ஓதப்படும் குரானின் இனிமை
இசைக்கப்படும் தேவனின் மகிமை
ஒழுகப்படும் அருகனின் வாய்மை
உணரப்படும் புத்தனின் மேன்மை
மொத்தமாய் திரண்ட உருவே!

ஒரு தீவிலிருந்து
உதித்தவன் நீ என்பதாலா
உன்னை எத்திசையிலும்
புகழின் பெருங்கடல்கள் சூழ்ந்தேயிருந்தன...

கனவுகாணுங்கள் கனவுகாணுங்கள் என போதித்தே
எண்ணற்ற இளைஞர்களால்
கனவு காணப்படுபவனாக நீ பிரகாசித்தாய்!

மெழுகுவர்த்தியென 
நீ உருகிக் கொண்டே இருக்க
உன் புகழின் பேரொளியோ
பெருகிக் கொண்டே இருந்தது...

அக்கினிச் சிறகுகளுடன்
ராமேசுவரத்தில் தயாரான அஸ்திரமே!
நீ பாய்ந்த இடங்களில் எல்லாம்
பேரூற்றாய் பீறிட்டன
குழ்ந்தைகளின் அன்பு
மாணவர்களின் சிநேகம்
இளைஞர்களின் கனவு
நோயாளிகளுக்கான பரிவு
முதியோர்களுக்கான கருணை
வாழ்வு மீதான நம்பிக்கை...

இந்திய துணைக்கண்டத்தில்
இதுவரை  நிகழ்ந்ததிலேயே
மிகப்பெரிய நிலநடுக்கம்  உன் இறப்புதான்...

கடற்கரையை மட்டுமல்ல
கண்டம் முழுவதையும் தாக்குகின்றன
துக்க சுனாமியின் பேரலைகள்
நாடே தத்தளிக்கிறது நாயகனே!

ஏவப்படும் எல்லா கணைகளும்
இலக்கை அடைந்து விடுவதில்லைதான்
ஆனால்
இலக்கை மிஞ்சிய இலக்குகளையும்
இனிதே அடைந்த
இறைவனின் ஆகச்சிறந்த ஏவுகணை நீ!
இறந்தப் பின்னரும்
அதன் இலக்குகள்
எய்தப் பட்டுக்கொண்டே இருக்கும்!