Thursday, September 22, 2011



தேடுங்கள் கிடைக்கும் என்றாய்
எங்கள் தேவனே
தேடத் தயார்தான்
ஆனால்
எங்கே தேடுவது என்றுதான் தெரியவில்லை



பறவைகளை பாருங்கள்
அவை விதைப்பதும் இல்லை
அறுப்பதும் இல்லை என்றாய்...
அதனால்தான்
அவற்றை வதைப்பதையும்
வறுப்பதையும்
செய்துக் கொண்டிருக்கிறோம்



குற்றமற்றவர்கள் கல்லெறியலாம் என்றாய்
எல்லோரும் குற்றவாளிகளே 
ஆகையால்தான்
ஒருவர் மீதே ஒருவர் கல்லெறிந்துக்கொள்கிறோம்
கலவரம் என்கிற பெயரில்








கவலைப்படுவதால்
உடம்பு வளர்ந்துவிடாது
என்று நீ சொன்னது உண்மைதான்
ஆனால் தாடிவளர்கிறதே








நீ கரங்களில் ஏந்திய ஆட்டுக்குட்டியை
நாங்கள் வளர்க்கிறோம்
ஆம்
கசாப்புக் கடைக்காக...


அடிவாங்கிய பின்பு
மறுகன்னத்தை காட்டாததால்தான்
அவர்கள் மீது படையெடுக்கிறோம்
அகிம்சையெனும் அமிர்த ரஸம்
வாயினுள் செல்ல ஏதுவாகத்தான்
பிடுங்குகிறோம் அவர்ம் பற்களை









தினந்தோறும் பெருகிவருகின்றன
தேவாலயங்கள்
ரகம் கூடிய விதங்களில் 
வண்ண வண்ணமாய்
உருகுகின்றன மெழுகுவர்த்திகளும்
ஆனால் தேவனே
உருகியபடியே மறைந்துவருவது
அந்த மெழுகுவர்த்திகள் மட்டுமல்ல
நீ உரைத்த உண்மையின் ஜீவஒளியும்தான்







எங்கள் துரோகங்களின் கழுத்தறுப்பை
நீ உன் மன்னிப்பால் ஒட்டவைத்தாய்
எங்கள் பாவங்களின் கறைகளை
நீ உன் ரத்தத்தால் சுத்திகரித்தாய்
எங்கள் வஞ்சகத்தின் இருட்டறைகளில்
நீ உன் புன்னகையால் ஒளியேற்றினாய்


எல்லாவற்றுக்கும்
இருக்கிறாய் நீ என்பதால்தான்
இன்னும் தொடர்கிறோம் அவற்றை
உறுத்தல்கள் ஏதுமின்றி


எங்கள் அன்பு தேவனே
மீண்டும் நீ உயிர்த்தெழுவாய்
என்கிற நம்பிக்கையில்தான்
நாங்கள்
உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்
உனக்கான சிலுவையை





தேடுங்கள் கிடைக்கும் என்றாய்
எங்கள் தேவனே
தேடத் தயார்தான்
ஆனால்
எங்கே தேடுவது என்றுதான் தெரியவில்லை



பறவைகளை பாருங்கள்
அவை விதைப்பதும் இல்லை
அறுப்பதும் இல்லை என்றாய்...
அதனால்தான்
அவற்றை வதைப்பதையும்
வறுப்பதையும்
செய்துக் கொண்டிருக்கிறோம்



குற்றமற்றவர்கள் கல்லெறியலாம் என்றாய்
எல்லோரும் குற்றவாளிகளே 
ஆகையால்தான்
ஒருவர் மீதே ஒருவர் கல்லெறிந்துக்கொள்கிறோம்
கலவரம் என்கிற பெயரில்








கவலைப்படுவதால்
உடம்பு வளர்ந்துவிடாது
என்று நீ சொன்னது உண்மைதான்
ஆனால் தாடிவளர்கிறதே








நீ கரங்களில் ஏந்திய ஆட்டுக்குட்டியை
நாங்கள் வளர்க்கிறோம்
ஆம்
கசாப்புக் கடைக்காக...


அடிவாங்கிய பின்பு
மறுகன்னத்தை காட்டாததால்தான்
அவர்கள் மீது படையெடுக்கிறோம்
அகிம்சையெனும் அமிர்த ரஸம்
வாயினுள் செல்ல ஏதுவாகத்தான்
பிடுங்குகிறோம் அவர்ம் பற்களை









தினந்தோறும் பெருகிவருகின்றன
தேவாலயங்கள்
ரகம் கூடிய விதங்களில் 
வண்ண வண்ணமாய்
உருகுகின்றன மெழுகுவர்த்திகளும்
ஆனால் தேவனே
உருகியபடியே மறைந்துவருவது
அந்த மெழுகுவர்த்திகள் மட்டுமல்ல
நீ உரைத்த உண்மையின் ஜீவஒளியும்தான்







எங்கள் துரோகங்களின் கழுத்தறுப்பை
நீ உன் மன்னிப்பால் ஒட்டவைத்தாய்
எங்கள் பாவங்களின் கறைகளை
நீ உன் ரத்தத்தால் சுத்திகரித்தாய்
எங்கள் வஞ்சகத்தின் இருட்டறைகளில்
நீ உன் புன்னகையால் ஒளியேற்றினாய்


எல்லாவற்றுக்கும்
இருக்கிறாய் நீ என்பதால்தான்
இன்னும் தொடர்கிறோம் அவற்றை
உறுத்தல்கள் ஏதுமின்றி


எங்கள் அன்பு தேவனே
மீண்டும் நீ உயிர்த்தெழுவாய்
என்கிற நம்பிக்கையில்தான்
நாங்கள்
உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்
உனக்கான சிலுவையை



No comments:

Post a Comment